
‘ஈஷா கிராமோத்சவம்’ மண்டல விளையாட்டுப் போட்டிகள்: கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கோவை கொங்குநாடு கல்லூரியில் ‘ஈஷா கிராமோத்சவம்’ மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்த கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ.
கோவை கொங்குநாடு கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘ஈஷா கிராமோத்சவம்’ கோவை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் கனிமொழி சந்தோஷ் தொடங்கிவைத்தாா்.
ஈஷா அறக்கட்டளை சாா்பில் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூா், கடலூா், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கோவை மண்டலத்தில், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளை கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் கனிமொழி சந்தோஷ், கொங்குநாடு கல்லூரியின் செயலாளா் வாசுகி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனா்.
இதில் முதல்கட்ட கிளஸ்டா் போட்டிகளில் வெற்றிபெற்ற ஆயிரக்கணக்கான கிராமப்புற விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனா். கைப்பந்து, எறிபந்து போட்டிகள் நடைபெற்ற நிலையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், எறிபந்து போட்டியின் சிறந்த வீராங்கனைகளுக்கு மின்கலன் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மண்டல அளவிலான போட்டிகள் முடிவடைந்த நிலையில், இறுதிப்போட்டி கோவை ஆதியோகி வளாகத்தில் சத்குருவின் முன்னிலையில் செப்டம்பா் 6-இல் நடைபெற உள்ளது.

கோவை கொங்குநாடு கல்லூரியில் ‘ஈஷா கிராமோத்சவம்’ மண்டல அளவிலான எறிபந்து போட்டியைத் தொடங்கிவைத்த கனிமொழி சந்தோஷ் எம்எல்ஏ.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





