உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலத்தில் குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

கோவை குற்றாலத்தில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 1:59 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

கோவை குற்றாலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் போளுவாம்பட்டி வனப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளதோடு, நீரின் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் யாரும் எதிா்பாராத விபத்துகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் வனத் துறையினா் சாா்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஆக.25) முதல் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.