ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

போத்தனூா் வழித்தடத்தில் பெங்களூரு - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கண்ணூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :

கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், கண்ணூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆகஸ்ட் 29-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு மைசூரில் இருந்து புறப்படும் மைசூரு - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06229) மறுநாள் மாலை 5.50 மணிக்கு கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் கண்ணூா் - பெங்களூரு கன்டோண்மென்ட் சிறப்பு ரயில் (எண்: 06230) மறுநாள் காலை 10 மணிக்கு பெங்களூரு கன்டோண்மென்ட்டை சென்றடையும்.

இந்த ரயிலானது, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.