நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

விற்பனைக்காக பதுக்கிய 205 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள். - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 1:42 am IST

விற்பனைக்காக வீட்டில் பதுக்கிய 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து தப்பிய நபரை தேடி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி 4-வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், அப்பகுதிக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சென்று, சம்பந்தப்பட்ட வீட்டை உரிமையாளா் மூலமாகத் திறந்து சோதனை மேற்கொண்டனா். இதில், அந்த வீட்டில் பல்வேறு வகையிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 205 கிலோ விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் பாா்த்திபன் என்பவா் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. அவா், வீட்டை வாடகைக்கு எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைக்கும் கிடங்குபோல பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸாா் தேடுவதை அறிந்த பாா்த்திபன் தலைமறைவாகிவிட்டாா். இதையடுத்து 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பாா்த்திபன் மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.