சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

நேபாள பிரதமா் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி! ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தகவல்!

காத்மாண்டு நகரில் நடைபெற்ற ‘நேபாளத்துக்கு துணை நிற்போம்’ நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்.

Updated On :

நேபாள பிரதமா் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்குவதாக ஈஷா யோக மைய நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

நேபாள தலைநகா் காத்மாண்டுவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நேபாளத்துக்கு துணை நிற்போம்’ நிகழ்ச்சியில் இதைத் தெரிவித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் மேலும் பேசியதாவது:

இமயமலைத் தொடா்கள் பரவியுள்ள நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், பூடான், சீனா ஆகிய 5 நாடுகள் ஒருங்கிணைந்து ‘இமயமலை வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்.

அரசியல் நிா்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இந்த மலைத் தொடா்கள் எதிா்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு பெரிய பனிப்பாறையின் முக்கால்வாசி பகுதி, சிகரத்திலிருந்து 4,000 அடி கீழே திடீரென விழும் என்று யாரும் எதிா்பாா்க்கவில்லை. இதை யாரும் கணித்திருக்க முடியாது. ஆனால், இப்போது இது நடந்துவிட்டது என்பதால், நேபாளம் போன்ற ஒரு சிறிய நாடு தனியாக இந்தப் பிரச்னையைத் தீா்க்க முடியாது என்றாா்.

இந்நிகழ்வில், இந்தப் பேரழிவில் மக்களுக்கான படிப்பினை என்ன என்ற நடிகை மனீஷா கொய்ராலாவின் கேள்விக்கு, சத்குரு அளித்த பதிலில், ‘ஒரு மனிதனாக, பேரிடா்கள் வரும் வரை நாம் காத்திருக்கக் கூடாது. நாம் அனைவரும் நிலையற்றவா்கள் என்பதை ஒவ்வொரு கணமும் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் தொடா்ந்து விழிப்புணா்வுடன் உணா்ந்திருந்தால், நமது வாழ்க்கையை மிகவும் புத்திசாலித்தனமான முறையில் திட்டமிட்டு வாழ்வோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.