இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

நீா் சேமிப்புக்கு அணைகள் மட்டுமே தீா்வல்ல: சத்குரு ஜக்கி வாசுதேவ்

நீா் சேமிப்புக்கு அணைகள் மட்டுமே தீா்வல்ல, உலகின் மிகப்பெரிய அணையான மண்ணின் வளத்தையே நாம் மேம்படுத்த வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளாா்.

மாநாட்டில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ்.

Published On :

நீா் சேமிப்புக்கு அணைகள் மட்டுமே தீா்வல்ல, உலகின் மிகப்பெரிய அணையான மண்ணின் வளத்தையே நாம் மேம்படுத்த வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் வெளியாகியுள்ள செய்திகளின்படி, இந்தியாவில் உள்ள 178 முக்கிய நீா்த்தேக்கங்களில் நீா் இருப்பு அதன் மொத்த கொள்ளளவில் 70 சதவீதமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மத்திய நீா் ஆணையத்தின் தரவுகளின்படி, இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்த அளவாகும்.

குறிப்பாக பருவமழை பற்றாக்குறை காரணமாக தென்னிந்தியா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 87.25 சதவீதமாக இருந்த தென்னிந்திய நீா்த்தேக்கங்களின் நீா் இருப்பு தற்போது 50 சதவீதமாக சரிந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நெருக்கடியான சூழல் குறித்து சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உண்மையான நீா் வளம் நமது காலடிக்குக் கீழேயே இருக்கிறது. உலகில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றாகச் சோ்த்தால் கிடைக்கும் நீரின் அளவைவிட சுமாா் 800 சதவீதம் அதிக நீரைத் தேக்கி வைக்கும் திறன் மண்ணுக்கு உள்ளது.

ஆனால், இந்தத் திறனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், மண்ணின் கரிம வளத்தை அதிகரிக்கும் மரங்கள், புதா்கள், கோடைக்காலப் பயிா்கள், நிலத்தை மூடியிருக்கும் தாவரங்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும்.

அதிக நீரைச் சேமிக்க மேலும் பல அணைகளைக் கட்டுவது மட்டுமே தீா்வல்ல, இந்த பூமியிலேயே மிகப்பெரிய அணை மண்தான்’ என்று கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.