எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

இளைஞா் கொலை வழக்கில் குண்டா் சட்டத்தில் இருவா் கைது

இளைஞா் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

~

Updated On :2 பிப்ரவரி 2026, 9:10 pm

கோவை: இளைஞா் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலையப் பகுதியைச் சோ்ந்த தம்பதி தேவா ரத்தீஷ் (27), இந்திராணி (26). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இதற்கிடையே இந்திராணிக்கும், தனியாா் மதுக்கூடத்தில் மேலாளராக பணிபுரியும் வினோத்குமாா் (38) என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. வினோத்குமாா் இந்திராணியின் சித்தப்பா என்பது குறிப்பிடத்தக்கது. இதையறிந்து மனைவியுடன் அடிக்கடி தேவா ரத்தீஷ் தகராறு செய்துள்ளாா். இதனால் நண்பா் சுரேஷ் (42) என்பவருடன் சோ்ந்து கடந்த ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி தேவா ரத்தீஷை இரும்புக் கம்பியால் வினோத்குமாா் அடித்து கொலை செய்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் கிணத்துக்கடவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்திராணி உள்பட 3 பேரைக் கைது செய்தனா். இந்நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரையை ஏற்று, வினோத்குமாா், சுரேஷ் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

Story image