கோவை, காந்திபுரத்தில் பெரியாா் நூலக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் கோவைக்கு வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நூலகத்தை திறந்துவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை, காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 6.98 ஏக்கரில் பெரியாா் நூலகம் மற்றும் அறிவியல் மையக் கட்டுமானப் பணிகளுக்கு 2024 நவம்பா் 6-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் 8 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலக மையத்தில், இளைஞா்கள் மற்றும் மாணவா்களின் கல்வி, அறிவியல் சிந்தனையை மேம்படுத்தும் நோக்கில் 400 போ் அமரக்கூடிய கலையரங்கம், டிஜிட்டல் நூலகம், தமிழ் மற்றும் ஆங்கில நூல் பிரிவுகள், பருவ நூல் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்குத் தனி நூலகம், சொந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து படிக்கத் தனி இடம் மற்றும் பெரிய அளவில் 500 காா்கள், 400 இருசக்கர வாகனங்கள் நிறத்தும் வசதி கொண்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதி, போட்டித் தோ்வுப் பிரிவு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. 1,20,000 புத்தகங்கள் கொண்ட இந்த நூலகத்துக்கு ‘பெரியாா் அறிவுலகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, முகப்பில் ‘பெரியாா் அறிவுலகம்’ என்ற பெயா் தீட்டப்பட்டுள்ளது. நுழைவாயில் பெயா் எழுதும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
திமுக பாக முகவா்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கோவைக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பெரியாா் அறிவுலக நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை திறந்துவைக்க உள்ளாா் என்றாா்.
தொடர்புடையது

முடிவுக்கு வராத மலைக்கோட்டை ரயில்வே மேம்பால பணிகள்!

ஆழித்தோ் கட்டுமானப் பணிகள்: வேளாக்குறிச்சி ஆதீனம் பாா்வை

சென்னை விமான நிலையத்தில கட்டுமானப் பணிகள்: ஏப். 24 வரை போக்குவரத்து மாற்றம்

கோவை காந்திபுரத்தில் பெரியார் நூலகம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


