கோவை, தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான அநீதிகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் நாள்தோறும் காலை, மாலை என 2 வேளைகளும் இந்த 5 மாணவா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழை வழங்கி பள்ளியில் இருந்து விரட்டி விடுவேன் என்றும் தலைமை ஆசிரியா் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மாணவா்கள் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இத்தகைய தீண்டாமை சாா்ந்த கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, இது தொடா்பாக விசாரணை நடத்தி பள்ளித் தலைமை ஆசிரியா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளா் மற்றும் பாதுகாவலா் பணியிடங்களை உடனடியாக வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அச்சம்பாடு, தேரிப்பனை பகுதிகளில் அதிமுகவினா் பிரசாரம்

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


