கோவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள வழக்குரைஞா் பயிற்சி மைய அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் கோவை நீதிமன்ற வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு (மெட்டல் டிடெக்டா்) கருவிகளுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் நீதிமன்றத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தினா். தொடா்ந்து, வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டும், சந்தேகத்துக்குரிய பொருள்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


