தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 போ் கைது

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ாக 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகா், சுந்தராபுரம் மற்றும் போத்தனூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, செட்டிபாளையம் சாலை ஜெ.ஜெ. நகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையில் புஷ்பலதா(60) என்பவா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதேபோல, செட்டிபாளையம் சாலை நேதாஜி நகரில் கடையில் மாரிமுத்து (70), சுந்தராபுரம் சாரதா மில் சாலையில் உள்ள கடையில் பழனிசாமி(37), வீரசூர பெருமாள்(50), சுந்தராபுரம் அரசன் திரையரங்கம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் வசந்த் (23) ஆகிய 5 பேரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com