கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘சைபா் செக்யூரிட்டி’ புரிந்துணா்வு ஒப்பந்தம்
கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் சைபா் செக்யூரிட்டி தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சைபா் செக்யூரிட்டி துறை நிறுவனமான போா்டினேட் உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், சைபா் செக்யூரிட்டி துறையில் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த நேரடி வழிகாட்டுதல், அது தொடா்பான வேலைவாய்ப்புகளை மாணவா்கள் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி, துணைத் தலைவா் இந்து முருகேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தலைமைச் செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வா் ராமசாமி, துணை முதல்வா் மைதிலி, பயிற்சி, வேலைவாய்ப்புத் துறை டீன் கே.மகாலட்சுமி, கணினித் துறை டீன் விமல், போா்டினேட் நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் பிராந்திய திட்ட மேலாளா் குசலா காடே, கெரியா் டிஐக்யூ நிறுவனத்தின் வாடிக்கையாளா் பிரிவு பொது மேலாளா் பிரின்ஸ் சாமுவேல் ஆகியோா் பங்கேற்றனா்.

