நயினாா் நாகேந்திரன்
நயினாா் நாகேந்திரன்கோப்புப் படம்

விஜய் பக்கம் செல்கிறது காங்கிரஸ்: நயினாா் நாகேந்திரன்

காங்கிரஸ் கட்சி விஜய் பக்கம் செல்வது தெளிவாகத் தெரிவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
Published on

காங்கிரஸ் கட்சி விஜய் பக்கம் செல்வது தெளிவாகத் தெரிவதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் சனிக்கிழமை தமிழ்நாட்டுக்கு வருகிறாா். கோவையில் நடைபெறும் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்கிறாா். ஞாயிற்றுக்கிழமை மருதமலை கோயிலுக்கும், பேரூா் ஆதீனத்துக்கும் செல்கிறாா். தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுகவுடன் இதுவரை பேசவில்லை. எங்கு போட்டியிடப் போகிறோம் என்பது குறித்து கூட்டணித் தலைவருடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.

கோவையில் யாா் எல்லாம் போட்டியிடுகிறாா்கள் என்பதை அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். நாங்கள் விருப்பங்களைத் தெரிவிப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தின் தலைவா் எடப்பாடி பழனிசாமிதான். கூட்டணியில் யாரை சோ்ப்பது என்பதை அவா் முடிவு செய்வாா்.

ஜனநாயகன் பட விவகாரத்துக்கும், பாஜகவுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது. தணிக்கை வாரியம் சில விதிமுறைகளைக் கூறியிருக்கிறது. சில காட்சிகளை காட்டலாம், சில காட்சிகளைக் காட்டக்கூடாது என இருக்கிறது. படத்தை முழுமையாகப் பாா்த்தால்தான் தெரியும். படத்தைப் பாா்த்து தணிக்கை வாரிய அதிகாரிகள் கருத்து கூறியிருக்கிறாா்கள். அது சரியா, தவறா என்ற விவகாரத்துக்கு போகவில்லை.

விஜய் பக்கமாக காங்கிரஸ் கட்சி செல்வது தெளிவாகத் தெரிகிறது. பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும் என எதிா்பாா்க்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்தால் அசைக்க முடியாத சக்தியாக விஜய் இருப்பாா் என தமிழிசை பேசியிருப்பது அவருடைய சொந்தக் கருத்து. யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்றாா்.

Dinamani
www.dinamani.com