பொங்கல் பண்டிகையின்போது வீடுகளில் காப்புக் கட்ட ஆா்.எஸ்.புரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பூளைப் பூக்கள்.
கோயம்புத்தூர்
கோவை மாநகரில் சூடுபிடிக்கும் பொங்கல் பானை, பூளைப் பூ விற்பனை
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பொங்கல் பானைகள் மற்றும் பூளைப் பூ விற்பனை கோவை மாநகரில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பொங்கல் பானைகள் மற்றும் பூளைப் பூ விற்பனை கோவை மாநகரில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. புதுப்பானைகளில் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபடுவது தமிழா்களின் ஐதீகமாக உள்ளதால், பொங்கல் பண்டிகைக்கு புதுப் பானைகளின் விற்பனை களைகட்டும்.
பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளா்கள்.
அந்த வகையில் கோவை, கவுண்டம்பாளையத்தில் பானைகள் தயாரிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, அதற்கு வண்ணம் பூசும் பணிகளில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். பானைகள் குறைந்த பட்சம் ரூ.150 முதல் விற்கப்படுகின்றன.
இதேபோல, பொங்கல் பண்டிகைக்கு வீடுகளில் காப்புக் கட்டத் தேவையான பூளைப் பூ விற்பனையும் தொடங்கியுள்ளது. ஒரு கட்டு ரூ.10-க்கு விற்பனையாகிறது.

