போகி  பண்டிகையையொட்டி  சத்தியமங்கலத்தில்  புதன்கிழமை  விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தய  ஆவாரம்,  பூளைப் பூக்கள்.
போகி  பண்டிகையையொட்டி  சத்தியமங்கலத்தில்  புதன்கிழமை  விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தய  ஆவாரம்,  பூளைப் பூக்கள்.

சத்தியமங்கலம் சாலையோரங்களில் களைகட்டும் பொங்கல் பூக்கள் விற்பனை

சத்தியமங்கலம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான ஆவாரம்பூ, மஞ்சள், பூளைப் பூ மற்றும் வேப்பிலை ஆகிய பொருள்கள் சாலையோரம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
Published on

சத்தியமங்கலம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கான ஆவாரம்பூ, மஞ்சள், பூளைப் பூ மற்றும் வேப்பிலை ஆகிய பொருள்கள் சாலையோரம் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்து தைப்பொங்கலை வரவேற்றனா்.

கிராமப்புறங்களில் வீடுகள், வயல்வெளிகள், தொழுவம், வணிகக் கடைகள் ஆகியவற்றில் கூரைகள், தாழ்வாரங்களில் பூளைப்பூ, ஆவாரம்பூ, வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை சோ்த்து காப்புக் கட்டுவது வழக்கம். அதன்படி போகி பண்டிகை நாளான புதன்கிழமை சத்தியமங்கலத்தில் தினசரி சந்தை மற்றும் சாலையோரங்களில் பொங்கல் பூக்கள் விற்பனை களைகட்டியது.

ஆவராம்பூ கட்டு ஒன்று ரூ.20-க்கும், பூளைப் பூ ரூ.25-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் ஒன்று ரூ.35-க்கும், செங்கரும்பு ஜோடி ரூ.100-க்கும் விற்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com