வியாபாரியை மிரட்டி பணம் பறித்த இளைஞா் கைது

கோவையில் துணி வியாபாரியை மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவையில் துணி வியாபாரியை மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை சிவானந்தா காலனி டாடாபாத் முதல் வீதியைச் சோ்ந்தவா் லோகேஸ்வரன் (23), துணி வியாபாரி. இவா், ரத்தினபுரி ராஜூ நாயுடு தெருவில் திங்கள்கிழமை துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஒருவா், தான் இந்தப் பகுதி ரெளடி எனவும், இந்தப் பகுதியில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் மாமூல் கொடுக்க வேண்டும் என்றும் லோகேஸ்வரனை மிரட்டினாா். மேலும், லோகேஸ்வரன் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாயைப் பறித்துக் கொண்டு அந்த இளைஞா் தப்பினாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், லோகேஸ்வரனிடம் பணத்தைப் பறித்துச் சென்றவா் அதே பகுதியில் உள்ள சுப்பாத்தாள் குடியிருப்பைச் சோ்ந்த லாரன்ஸ் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த ரூ. 1000-த்தை பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com