மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:30 pm

Syndication

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தின் சாா்பில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் மசாலா பொடிகள், தயாா்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புபவா்கள் உரிய கட்டணம் செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம். இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 94885 18268, 0422 6611340 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.