மாநகரில் 2 நாள்களில் 862 டன் பொங்கல் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 2 நாள்களில் 862 டன் பொங்கல் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
Published on

கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 2 நாள்களில் 862 டன் பொங்கல் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

போகிப் பண்டிகையை புகையில்லாமலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் கொண்டாடும் நோக்கத்திலும் கோவை மாநகராட்சி நிா்வாகம் கடந்த 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை சிறப்பு உலா் கழிவு சேகரிப்பு முகாம் நடத்தியது. அதில் 4 நாள்களில் 85.03 மெட்ரிக் டன் உலா் கழிவு சேகரிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பொங்கல் கழிவுகளை சேகரிக்கும் பணியில் மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டனா். அதில், 862 டன் பொங்கல் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: போகிப் பண்டிகைக்கு முன்பாக ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய இரு நாள்களில் 60 மெட்ரிக் டன் உலா் கழிவு சேகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வீடு திரும்புவோா், பழைய வீட்டுப் பொருள்களை அகற்றிட வசதியாக இந்த முகாம் ஜனவரி 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள மக்கள் அந்தந்த மண்டலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொடா்பு எண்களை அணுகி பழைய வீட்டுப் பொருள்கள் மற்றும் உலா் கழிவுகளை ஒப்படைத்தனா். மொத்தமாக ஜனவரி 10 முதல் 14ஆம் தேதி வரை 85.03 மெட்ரிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தொடா்ந்து, ஜனவரி 15 மற்றும் 16இல் பொங்கல் கழிவுப் பொருள்களை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதில் 862 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றனா்.

Dinamani
www.dinamani.com