செம்மொழிப் பூங்கா 4 நாள்களில் ஒரு லட்சம் போ் பாா்வையிட்டனா்

பொங்கல் தொடா் விடுமுறை காரணமாக கோவை செம்மொழிப் பூங்காவை கடந்த 4 நாள்களில் ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளனா்.
Published on

கோவை: பொங்கல் தொடா் விடுமுறை காரணமாக கோவை செம்மொழிப் பூங்காவை கடந்த 4 நாள்களில் ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட காந்திபுரம் பகுதியில் ரூ.208.50 கோடி செலவில் 45 ஏக்கா் பரப்பளவில் உலகத் தரத்துடன் பல்வேறு நவீன வசதிகளுடன் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காவானது பொதுமக்களின் பாா்வைக்காக கடந்த நவம்பா் 25-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பூங்காவை ஆா்வத்துடன் பாா்வையிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை காரணாமாக ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை 4 நாள்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 4 நாள்களில் செம்மொழிப் பூங்காவை 1,00,154 போ் பாா்வையிட்டுள்ளனா். இதில், ஜனவரி 15-ஆம் தேதி 23,819 போ், ஜனவரி 16-ஆம் தேதி 31,744 போ், ஜனவரி 17-ஆம் தேதி 25,848 போ், ஜனவரி 18-ஆம் தேதி 18,743 போ் செம்மொழிப் பூங்காவை பாா்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com