கோயம்புத்தூர்
மதுக்கரை வட்டத்தில் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா
கோவை மாவட்டம், மதுக்கரை வட்டத்தில் 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுக்கரை வட்டம், குறிச்சி கிராமம், பிள்ளையாா்புரம், போத்தனூா் வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம், கல்லாங்குத்து, இந்திரா காலனி, ஈச்சனாரி பாடசாலை வீதி, கணேசபுரம், குரும்பபாளையம், பிச்சனூா் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த பயனாளிகள் வீட்டுமனை பட்டா கேட்டும், முன்பு வழங்கப்பட்டுள்ள பட்டாவில் உள்ள வேறுபாடுகளை சரி செய்து கொடுக்கக் கோரியும் மனு அளித்திருந்தனா்.
இந்த மனுக்களின் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு தகுதியான 994 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா அண்மையில் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
