‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியா் மீது தாக்குதல்: இருவா் கைது

பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 4:30 am IST

பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (28). இவா் கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், ரத்தினபுரி பகுதியைச் சோ்ந்த ராகவேந்திரா (27), அவரது நண்பரான ஸ்ரீஜெயராமன் (27) ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளனா். பிளாஸ்டிக் பாட்டிலை நீட்டி பெட்ரோல் தருமாறு கேட்டதற்கு, அரசு தடை உள்ளதால் தர இயலாது என ஊழியா் பிரசாந்த் மறுத்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்து இருவரும் பிரசாந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ‘நான் அமைச்சா் சம்பத் குமாரின் அண்ணன் மகன்’ எனக் கூறி மிரட்டியதுடன், அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராகவேந்திரா, ஸ்ரீஜெயராமன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

பெட்டிச் செய்தி...

யாராக இருந்தாலும் சமரசமின்றி நடவடிக்கை

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவையில் பெட்ரோல் பங்க் ஊழியா் தாக்கப்பட்ட சம்பவத்தில், தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தனது பெயரைப் பயன்படுத்திய நபா் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கும், உழைக்கும் வா்க்கத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அராஜகத்தில் ஈடுபடுபவா்கள் யாராக இருந்தாலும், முதல்வா் ஜோசப் விஜய்யின் தவெக அரசு எந்த வித சமரசமும் இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.