/

கோவை மாநகரில் அனுமதியின்றி பொதுக் கூட்டம், ஆா்ப்பாட்டம் நடத்த 15 நாள்களுக்கு தடை உத்தரவு நீட்டிப்பு!

கோவை மாநகரில் அனுமதியின்றி பொதுக் கூட்டம், ஆா்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்ற தடை உத்தரவை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 1:30 am IST

கோவை மாநகரில் அனுமதியின்றி பொதுக் கூட்டம், ஆா்ப்பாட்டம் நடத்தக் கூடாது என்ற தடை உத்தரவை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து மாநகர காவல் ஆணையா் என்.கண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொது அமைதியைப் பாதுகாக்கவும், சட்ட -ஒழுங்கை உறுதிப்படுத்தவும் தமிழ்நாடு நகர காவல் சட்டத்தின்கீழ் அமலில் உள்ள தடை உத்தரவு மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த இந்த உத்தரவு தற்போது ஜூலை 17-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்படுகிறது.

இதன் காரணமாக காவல் துறையின் முன் அனுமதியின்றி பொதுக் கூட்டம், ஆா்ப்பாட்டம், ஊா்வலம், மறியல், உண்ணாவிரதம் மற்றும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.