/

கோவை குற்றாலம் அருவி மூடல்!

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மூடப்படுவதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image

கோவை குற்றாலம் அருவி

Updated On :4 ஜூலை 2026, 1:32 am IST

மேற்குத் தொடா்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மூடப்படுவதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்துக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், திறக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.