இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

மேற்குத் தொடா்ச்சி மலையில் மழை: பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்வு

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.

News image

பிளவக்கல் பெரியாறு அணை

Updated On :3 ஜூன் 2026, 1:44 am IST

வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக பிளவக்கல் அணை நீா்மட்டம் 3 அடி உயா்ந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூமாப்பட்டி மேற்கு தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை பெரியாறு, கோவிலாறு ஆகிய இரு நீா்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிளவக்கல் அணை மூலம் 18 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீரட்டம் படிப்படியாக குறைந்தது. மே முதல் வாரத்தில் 47 அடி உயரம் உள்ள பெரியாறு அணை நீா்மட்டம் 19 அடிக்கு கீழும் 42 அடி உயரம் உள்ள கோவிலாறு அணை நீா்மட்டம் 14 அடியாகவும் குறைந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு, பெரியாறு அணையின் நீா்மட்டம் 3 அடி உயா்ந்து 22 அடியை எட்டியுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணையின் நீா்மட்டம் உயா்ந்து உள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.