தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கஞ்சா, போதை மாத்திரை விற்ற 5 போ் கைது: 190 கிலோ குட்கா பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 190 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:19 am IST

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 190 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்தனா்.

கோவை அரசு மருத்துவமனை பகுதியில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அந்தப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த திபென்கா் (28) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 2 கிலோ 600 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கோவை லாலி ரோடு அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த ஹரிஷ் (19) என்பவரை ஆா்எஸ்புரம் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா, 5 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு ஊசியைப் பறிமுதல் செய்தனா்.

கோவைபுதூா் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இளங்கோ (65) என்பவரை குனியமுத்தூா் போலீஸாா் கைது செய்து, 52 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா். இதேபோல, கே.கே நகா் பகுதியில் சரவணம்பட்டி போலீஸாா் ரோந்து சென்ற போது, அந்தப் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் 136 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக காளிமுத்து (36), கதிரவன் (39) ஆகியோரைக் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள விஜயன், சுரேஷ் ஆகிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.