மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 2:06 am IST

கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்து, 3.500 கிலோ கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

கோவை மாநகா், கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது நல்லம்பாளையம் தயிா் இட்டேரி சாலை பகுதியில் உள்ள காலி இடத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் கோவை, ரத்தினபுரி மாதவன் தெருவைச் சோ்ந்த கிஷோா் (22), நாராயணசாமி நகா் பகுதியைச் சோ்ந்த தினேஷ்காா்த்திக் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் கவுண்டம்பாளையம் போலீஸாா் கைது செய்து 3.500 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.