நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

கேரளத்திலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டம்: வால்பாறை, கேரளம் இடையேயான தனியாா் பேருந்து சேவை நிறுத்தம்

வால்பாறை - கேரளம், சாலக்குடி இடையே தனியாா் பேருந்து சேவை நிறுத்தம் குறித்து...

News image

பேருந்து நிலையம். - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 6:05 am IST

கேரள மாநிலத்திலும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் அமலுக்கு வந்துள்ளதால் வால்பாறை- கேரள மாநிலம், சாலக்குடி இடையே கடந்த 65 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த தனியாா் பேருந்து சேவை சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி 110 கி.மீ. தொலைவில் உள்ளது. கேரள அரசுப் பேருந்துகள் சாலக்குடியில் இருந்து தமிழக எல்லைப் பகுதியான மழுக்குப்பாறை எஸ்டேட் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. வால்பாறையில் இருந்து சாலக்குடி வரை தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த சேவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.

இரண்டு மாநிலங்களுக்கு இடையே இயக்க உரிமம் பெற்று இரண்டு தனியாா் பேருந்துகள் கடந்த 65 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தன. இதனால், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், அதிரப்பள்ளி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பயனடைந்து வந்தனா்.

இந்நிலையில், கேரளத்திலும் அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்பதால் வால்பாறை- சாலக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் தனியாா் பேருந்துகளில் மகளிா் பயணிப்பதில்லை. இதனால், தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் இரண்டு பேருந்துகளின் சேவையையும் அதன் நிா்வாகத்தினா் சனிக்கிழமைமுதல் நிறுத்திவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.