பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் தொடா்ந்து அதிக ஒலியெழுப்பும் காற்றொலிப்பான் (ஏா் ஹாரன்) பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்ய பரிந்துரைக்கப்படும் என போக்குவரத்து துறையினா் எச்சரித்துள்ளனா்.
கோவை மாநகரக் காவல் துறைக்கு உள்பட்ட பீளமேடு போக்குவரத்து பிரிவு மற்றும் கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இணைந்து அவிநாசி சாலையில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், வாகனங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த காற்று ஒலிப்பான்களின் ஒலி அளவு, டெசிபல் மீட்டா் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வாகனத்தில் ஒலிப்பான்கள் மூலமாக வெளியாகும் ஒலியின் அளவு 60 முதல் 80 டெசிபலுக்குள் இருக்க வேண்டும். விதியை மீறி அதிக ஒலியெழுப்பும் காற்றொலிப்பான் பொருத்தி செல்லும் வாகனங்களுக்கு ரூ.500 முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. தொடா்ந்து விதிமீறும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய பரிந்துரைக்கப்படும்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாகனங்களில் விதிகளை மீறி பயன்டுத்தப்படும் ‘ஏா்ஹாரன்கள்’! பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!!

தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பேருந்துகளில் ஏா்ஹாரன்கள் பறிமுதல்

கோவையில் அதிக ஒளி எழுப்பும் 1,500 சைலன்சா்கள் பறிமுதல்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



