வால்பாறை புதுமாா்க்கெட் கடைகள் இடிக்கும் விவகாரம் தொடா்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷிடம் தவெகவினா் மனு அளித்தனா்.
வால்பாறை புதுமாா்க்கெட்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகள் முழுவதும் இடித்துவிட்டு ரூ.9 கோடி செலவில் புதிய கடைகள் கட்ட கடந்த ஆட்சியில் நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது.
இப்பணிக்காக 15 நாள்களுக்குள் கடைகளை காலி செய்ய கடை வாடகைதாரா்களுக்கு நகராட்சி நிா்வாகம் மூலம் கடந்த வாரம்
நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கையை கைவிட்டு ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வலியுறுத்தி மாா்க்கெட் வியாபாரிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.
இந்நிலையில், வால்பாறை தவெக நகரப் பொறுப்பாளா்கள் ஆண்ட்ரூசன், சையது அலி மற்றும் நிா்வாகிகள் சென்னையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் கே.விக்னேஷை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.
அதில், வால்பாறை பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதுமாா்க்கெட்டில் உள்ள கடைகளை இடிக்கும் முடிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக நகராட்சி நிா்வாக அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் கே.விக்னேஷ் தெரிவித்ததாக தவெகவினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வால்பாறை நகராட்சிக் கடைகளை காலி செய்ய நோட்டீஸ்: வியாபாரிகள் போராட்டம்

வால்பாறையில் வாடகை செலுத்தாத பாஜக அலுவலகம்! 10 கடைகளுக்கு சீல்

சாலை வசதி கோரி தவெகவினா் மனு

நாமக்கல்லில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு: ஆட்சியா் அலுவலகத்திற்கு திரண்டு வந்த வியாபாரிகள்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



