நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

செட்டிபாளையம் அருகே விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

........

Updated On :23 ஜூலை 2026, 3:57 am IST

செட்டிபாளையம் அருகே விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை அருகே செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, செட்டிபாளையம் மயிலேறிபாளையம் பகுதியில் பொள்ளாச்சி சாலையில் போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில் அவா் 2 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா், ஈரோட்டைச் சோ்ந்த முனுசாமி மகன் விஷால் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.