டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

500 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரில் குடியிருப்புப் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :

திருப்பூரில் குடியிருப்புப் பகுதியில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 500 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகா், இடுவம்பாளையத்தில் குடியிருப்புப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் வீரபாண்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அருண் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, துணிகளுக்கு இடையிலும், பிளாஸ்டிக் கூடைகளிலும் 500 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அருணைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.