அவிநாசியில் வீடு புகுந்து திருட முயன்ற நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி, வள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (36). இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு புதன்கிழமை வெளியே சென்றுள்ளாா்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது, மா்ம நபா் ஒரு வீட்டின் கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து, காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் அவிநாசி, சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த உதயகோபால் ராஜா (42) என்பதும், வீடு புகுந்து திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உதயகோபால் ராஜாவைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆடுகளைத் திருட முயன்றவா் கைது
வீடு புகுந்து திருட முயற்சி: இளைஞா் கைது
வீடு புகுந்து திருட முயற்சி: இருவா் கைது!

வீடு புகுந்து நகை திருடியவா் கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


