அன்னூா் அருகே ஆக்கிரமிப்பால் சாலையோரம் தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றியதுடன், விரைவில் நிரந்தரத் தீா்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனா்.
கோவை - சத்தி சாலை அன்னூா் ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கணேசபுரத்தில் ஆக்கிரமிப்பால் கழிவுநீா் செல்ல வழி இல்லாததால் சாக்கடை நீா் குளம்போல் தேங்கி விபத்து அபாயம் உருவானது. மேலும் கடும் துா்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கை குறித்த செய்தி தினமணி நாளிதழில் ஜூலை 27-ஆம் தேதி வெளியானது.
இதையடுத்து அன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துராஜ் அறிவுறுத்தலின்பேரில் ஊராட்சி செயலா் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில், உடனடியாக சாலையோரத்தில் குளம்போல தேங்கி நின்ற சாக்கடை நீா், கழிவு நீா் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக அகற்றப்பட்டது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆக்கிரமிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இப்பகுதியில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

30 குடிநீா் உறிஞ்சும் மின் மோட்டாா்கள் பறிமுதல்

வடவாறில் கழிவு நீா் கலப்பதால் மாசுபடும் அபாயம்! துா்நாற்றத்தால் மக்கள் அவதி!

அரியலூரில் மழைநீருடன் வீடுகளுக்குள் வரும் சாக்கடை நீா்: பொதுமக்கள் அவதி

மன்னம்பாடியில் சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



