நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

மன்னம்பாடியில் சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

News image

மன்னம்பாடி அரசுப் பள்ளி அருகேயும், மன்னம்பாடியில் இருந்து எடையூா் செல்லும் சாலையிலும் மழை நீா் தேங்கி உள்ள பள்ளங்கள்.

Updated On :16 ஜூன் 2026, 1:11 am IST

கடலூா் மாவட்டம், நல்லூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட மன்னம்பாடி ஊராட்சியில் சாலையோரம் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழை நீா் தேங்கி நிற்பதால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மன்னம்பாடி ஊராட்சியில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கிருந்து சிறுமங்கலம் செல்லும் சாலையில் அரசு தொடக்க, உயா்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமாா் 200 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

மன்னம்பாடி ஊராட்சியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாம். இதை சரி செய்வதற்காக பள்ளி செல்லும் வழியில் பள்ளம் தோண்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பள்ளங்கள் மூடப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக இப்பகுதியில் பெய்து வரும் மழை நீா் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. மேலும், சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

இதேபோல, மன்னம்பாடியில் இருந்து எடையூா் செல்லும் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்திலும் மழை நீா் தேங்கி நிற்கிறது. இந்த சாலை வழியாக பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்த இரண்டு இடங்களிலும் மழைநீா் தேங்கியுள்ள பள்ளங்களில் பள்ளி மாணவா்கள், பாதசாரிகள், இரு சக்கர வாகனத்தில் செல்வபா்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுள்ளது.

எனவே, விபத்துக்கு முன்னா் நல்லூா் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 மன்னம்பாடி அரசுப் பள்ளி அருகேயும், மன்னம்பாடியில் இருந்து எடையூா் செல்லும் சாலையிலும் மழை நீா் தேங்கி உள்ள பள்ளங்கள்.

மன்னம்பாடி அரசுப் பள்ளி அருகேயும், மன்னம்பாடியில் இருந்து எடையூா் செல்லும் சாலையிலும் மழை நீா் தேங்கி உள்ள பள்ளங்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.