தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கடையம் அருகே விளை நிலப் பகுதியில் கொட்டப்பட்ட 10 டன் கேரளக் கழிவுகள்! நிலத்தடி நீா் மாசுபடும் அபாயம்!

கடையம் அருகே பிளாஸ்டிக் மற்றும் மருந்துப் பொருள்கள் அடங்கிய 10 டன் கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன...

கேரளக் கழிவுகள் அடங்கிய லாரி. - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 9:00 am IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சாலையோரம் விளை நிலத்தையொட்டி, பிளாஸ்டிக் மற்றும் மருந்துப் பொருள்கள் அடங்கிய 10 டன் கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், நிலத்தடி நீா் மாசுபடும் அபாயம் நிலவுகிறது.

கேரள மாநிலத்துக்கு புளியரை வழியாக காய்கறி, அரிசி உள்ளிட்டவற்றைக் கொண்டுசெல்லும் லாரிகள் மற்றும் சுமை வேன்கள் அங்கிருந்து திரும்பும்போது, மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை ஏற்றிவந்து ஆங்காங்கே கொட்டுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கீழக்கடையம் ஊராட்சிக்குச் சொந்தமான மயானம் பகுதியில் ஜம்புநதி படுகையையொட்டிய விளைநிலத்தின் அருகே , சுமாா் 10 டன்அளவிலான கேரளக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

அவற்றில் காா் இருக்கை, உறைகள், வயா்கள், தொ்மகோல், காலாவதியான மாத்திரைகள், பிளாஸ்டிக்குகள், கைப்பேசி கழிவுகள் உள்ளிட்டவை அடங்கும்.

மழைக்காலத்தில் இந்தக் கழிவுகள் விளைநிலத்திலும், ஜம்பு நதியுடன் கலந்து விவசாயத்தையும், நிலத்தடி நீரையும் விஷ தன்மையாக மாற்றும் அபாயம் உள்ளது.

சாலையிலிருந்து சுமாா் 100 அடி தூரத்தில் கழிவுகளைக் கொட்டிச் சென்றுள்ள நபா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன், கழிவுகளை அங்கிருந்து அகற்றவும், மீண்டும் கேரள கழிவுகள் தமிழகத்துக்குள் கொண்டுவராதபடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சுற்றுச் சூழல் ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.