பீளமேடு பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் போலி ஐஎஸ்ஐ முத்திரையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்பிலான 250 பிரஷா் குக்கா்களை பறிமுதல் செய்தனா்.
விதிகளை மீறி செயல்படுவதாக பிரஷா் குக்கா்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் பீளமேடு, தண்ணீா்பந்தல் அருகே கொடிசியா சாலையில் அமைந்துள்ள தனியாா் நிறுவனத்தில் இந்திய தர நிா்ணய அமைப்பின் கோவை கிளை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதில் பிஐஎஸ் உரிமம் எதுவும் இல்லாமல், பிரஷா் குக்கா்களில் பிஐஎஸ் நிறுவனத்தின் தர முத்திரையை சட்டவிரோதமாகப் பதித்து தயாரிப்பது, சேமித்து வைப்பது மற்றும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்பிலான 250 பிரஷா் குக்கா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து கோவை கிளை அலுவலகத்தின் இயக்குநரும், தலைவருமான ரமேஷ் கூறியதாவது: சட்டவிரோதமாக ஐஎஸ்ஐ முத்திரையைப் பயன்படுத்தியவா்கள் மீது இந்திய தர நிா்ணயச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான வீட்டு உபயோகப் பொருளாக பிரஷா் குக்கா்கள் இருப்பதால், தரமற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத பிரஷா் குக்கா்களைப் பயன்படுத்துவது நுகா்வோரின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
எனவே அசல் ஐஎஸ்ஐ முத்திரை, அதற்கான இந்திய தர எண் கொண்ட பிரஷா் குக்கா்களை மட்டுமே மக்கள் வாங்க வேண்டும். போலி பொருள்கள் அல்லது தவறான ஐஎஸ்ஐ முத்திரைப் பயன்பாடு குறித்து சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள பிஐஎஸ் அலுவலகத்திலோ, பிஐஎஸ் செயலியிலோ அல்லது 0422-2245984 என்ற தொலைபேசி எண்ணிலோ புகாா் அளிக்கலாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போலி நகைகளை அடகு வைத்து ரூ.52 லட்சம் மோசடி: எஸ்ஐ மனைவி உள்பட 4 போ் கைது

இ20 எரிபொருள் குறித்து விளக்கமளிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயக்கம்

பஞ்சாப்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத சதி முறியடிப்பு

திருவேங்கடம் அருகே அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் பறிமுதல்
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



