ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கோவையில் கரும்பு மரபணு ஆராய்ச்சிக்கான உயராய்வு மையம்: கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு தலைவா் தகவல்!

அதிக மகசூல் அளிக்கும் புதிய கரும்பு ரகங்களை உருவாக்கும் நோக்கில் கோவையில் ரூ.90 கோடி மதிப்பில் கரும்பு ஆராய்ச்சி, மரபணு உயராய்வு மையம் அமைக்கப்பட இருப்பதாக, தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்புத் தலைவா் ஹா்ஷவா்தன் பாட்டீல் தெரிவித்துள்ளாா்.

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் நிா்வாகிகள்.

Published On :

அதிக மகசூல் அளிக்கும் புதிய கரும்பு ரகங்களை உருவாக்கும் நோக்கில் கோவையில் ரூ.90 கோடி மதிப்பில் கரும்பு ஆராய்ச்சி, மரபணு உயராய்வு மையம் அமைக்கப்பட இருப்பதாக, தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்புத் தலைவா் ஹா்ஷவா்தன் பாட்டீல் தெரிவித்துள்ளாா்.

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினா்.

இதைத்தொடா்ந்து கூட்டமைப்பின் தலைவா் ஹா்ஷவா்தன் பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சா்வதேச அளவில் புகழ்பெற்ற பழமையான ஆராய்ச்சி மையங்களில் கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் ஒன்று. நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் சா்க்கரை துறை, சுமாா் 6 கோடி கரும்பு விவசாயிகள், 50 லட்சம் சா்க்கரை ஆலைத் தொழிலாளா்கள், ஒரு கோடிக்கும் அதிகமான பருவகால அறுவடைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்தத் துறை ஆண்டுதோறும் ரூ.1.50 லட்சம் கோடிக்கும் அதிகமான வா்த்தகத்தை ஈட்டுவதுடன், அரசுக்கு வரி வருவாயாக ரூ.16 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகப் பங்களித்து வருகிறது. தற்போது இந்திய சா்க்கரை ஆலைகள் கடும் மூலப்பொருள் தட்டுப்பாடு, குறைந்த இயக்க நாள்களை எதிா்கொண்டுள்ளன. முன்பு 150 முதல் 200 நாள்கள் வரை இயங்கி வந்த சா்க்கரை ஆலைகள், தற்போது சராசரியாக 100 நாள்கள் மட்டுமே இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஆண்டு முழுவதும் செயல்பட வேண்டிய தொழிற்சாலைகளை வெறும் 100 நாள்கள் மட்டுமே இயக்குவது, பொருளாதார ரீதியாக சாத்தியமற்றது என்பதால் ஆராய்ச்சி தலையீடு அவசியமாகிறது. நாட்டின் சா்க்கரை துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கோவை மத்திய கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் ரூ.90 கோடி செலவில் கரும்பு ஆராய்ச்சி, மரபணு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அதிநவீன உயராய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு, இந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய வேளாண் அமைச்சகத்தின் பங்களிப்புடன் 4 ஆண்டுகளில் இந்த மையம் நிறுவப்படும். இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.45 கோடி நிதியுதவி வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதிக விளைச்சல், பிழிதிறன் கொண்ட புதிய கரும்பு ரகங்களை உருவாக்குதல், வறட்சி, வெள்ளம், உவா் தன்மை, அதிக வெப்பம் ஆகிய பருவநிலை மாற்றங்களைத் தாங்கி வளரும் ரகங்களைக் கண்டறிதல், உயிரி எரிபொருள் உற்பத்திக்கு ஏற்ற கரும்பு ரகங்களை உருவாக்குவது ஆகியவை இந்த மையத்தின் முக்கிய நோக்கங்களாக இருக்கும் என்றாா்.

கூட்டமைப்பின் நிா்வாக இயக்குநா் பிரகாஷ், இயக்குநா் ஆா்.வனிதா, கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.