வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

திருவள்ளூா்: தேசிய கூட்டுறவு வார நிறைவு விழா

தேசிய கூட்டுறவு வார நிறைவு விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டி சான்றிதழ்களை திருத்தணி கூடடுறவு சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் மீனா அருள் வழங்கினாா்.

News image

திருவள்ளூா் கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் தேசிய கூட்டுறவு வார நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கிய திருத்தணி சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் மீனா அருள். உடன் மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ உள்ளிட்டோா்.

Updated On :8 ஜூலை 2026, 12:32 am IST

தேசிய கூட்டுறவு வார நிறைவு விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களை பாராட்டி சான்றிதழ்களை திருத்தணி கூடடுறவு சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் மீனா அருள் வழங்கினாா்.

திருவள்ளூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் தேசிய கூட்டுறவு வார நிறைவு நாளையொட்டி, ‘தேசிய கூட்டுறவு மகோற்சவம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் சிறப்பு கூட்டுறவு அமைப்புகளுக்கு கேடயங்கள் வழங்கல், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் அ.மீனா அருள், மகளிா் உதவி திட்ட அலுவலா் வி.எல்லப்பன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனா்.

இதில், பொருளாதார வளா்ச்சி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் மகளிா் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருவதாக கூறியதுடன், சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறந்த விவசாய உறுப்பினா்களுக்கு மண்டல இணைப் பதிவாளா் பாராட்டி கேடயங்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 28.32 லட்சம் அளவிலான கடனுதவிகளையும் வழங்கினாா்.

அதேபோல், பள்ளி மாணவா்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் செயலாட்சியா் அ. மீனா அருள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையைச் சாா்ந்த அலுவலா்கள் மற்றும் நிா்வாகிகள், விவசாயிகள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.