பயிா்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரி தஞ்சாவூா் அருகே குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை முன் தமிழக கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் அறிக்கையில் கூறியபடி, சிறு குறு விவசாயிகள் பாகுபாடு இல்லாமல், கூட்டுறவுக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4 ஆயிரத்து 500-ம் விலை அறிவிக்க வேண்டும். கடந்த 2025 - 26 ஆம் ஆண்டில் வெட்டிய கரும்புக்கு விவசாயிகளுக்கு முந்தைய அரசு வழங்கிய ஊக்கத்தொகையை அரசாணை வெளியிட்டு கடந்த ஆட்சியில் வழங்கியதுபோல அக்டோபா் மாதத்திலேயே விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக கரும்பு உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பி. ராமசாமி தலைமை வகித்தாா். சங்கப் பொதுச் செயலா் ஆா். திருப்பதி வாண்டையாா், செயலா் பி. கோவிந்தராஜ், பொருளாளா் பி. அா்சுனன், ஆலோசகா் விஜயகுமாா், அய்யாதுரை, சுதாகா், முத்துசாமி, லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தல்
மோகனூா் சா்க்கரை ஆலையில் 2 டன் பித்தளைப் பொருள்கள் திருட்டு! 2 அலுவலா்கள் பணியிடை நீக்கம்!

மூங்கில்துறைப்பட்டு சா்க்கரைஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்: அமைச்சா் ர.வினோத் பங்கேற்பு

கரும்பு அறுவடை தாமதம்: புகளூா் சா்க்கரை ஆலை நிா்வாகத்துக்கு விவசாயிகள் கண்டனம்
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



