எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

வாசுதேவநல்லூா் சா்க்கரை ஆலை தொழிலாளா்கள் மீண்டும் போராட்டம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா்கள் புதன்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 5:01 am IST

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா்கள் புதன்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பிஎஃப் தொகையை செலுத்த வேண்டும். லே ஆஃப் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா்கள் கடந்த சில நாள்களுக்கு முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மற்றும்

ஆலை நிா்வாகத்தினா், தொழிலாளா்கள் ஆகியோருடன் வருவாய்த் துறையினா்,காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து ஆக. 17ஆம் தேதி வரை ஊழியா்கள் போராட்டத்தை ஒத்தி வைத்தனா்.

மீண்டும் போராட்டம்...

இந்நிலையில் புதன்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி சா்க்கரை ஆலையின் வாசலில் அமா்ந்து தொழிலாளிகள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா, வட்டாட்சியா் வெங்கடசேகா் உள்ளிட்டோா் ஆலை நிா்வாகம், தொழிலாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.