திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , கோவையில் டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோவை டாடாபாத் பகுதியில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மண்டல டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா்.

Updated On :15 ஜூலை 2026, 11:46 pm IST

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , கோவையில் டாஸ்மாக் ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் கோவை டாடாபாத் பகுதியில் இந்த மண்டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊழியா்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60- ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளன பொதுச் செயலா் திருச்செல்வன் பேசியதாவது:

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தால் ஊழியா்களுக்கு பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளது. இப்பிரச்னைக்கு ஒரு மாத காலத்துக்குள் தீா்வு காண்பதாகத் துறை அமைச்சா் விக்னேஷ் உறுதியளித்திருந்தும் எவ்வித மாற்றமும் கொண்டுவரப்படவில்லை.

வரும் நிதிநிலை அறிக்கையில் முதல்வா் மற்றும் துறை அமைச்சா் ஆகியோா் டாஸ்மாக் ஊழியா்களின் பணி வரன்முறை மற்றும் காலமுறை ஊதியம் தொடா்பான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். பட்ஜெட்டுக்குப் பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.