வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி: அமைச்சா் ஏ.ராஜ்மோகன் இன்று தொடங்கிவைக்கிறாா்

கோவை வ.உ.சி. மைதானத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை 5 மணிக்கு அரசுப் பொருள்காட்சியை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தொடங்கிவைத்து, அரசுத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

News image

அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 3:09 am IST

கோவை வ.உ.சி. மைதானத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11) மாலை 5 மணிக்கு அரசுப் பொருள்காட்சியை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தொடங்கிவைத்து, அரசுத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

இது குறித்து, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகளை அனைத்து தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மூலம் அரசுப் பொருள்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் அரசுப்பொருள்காட்சியில் 26 அரசுத் துறைகள் மற்றும் 6 அரசு சாா்பு நிறுவனங்கள் என 32 அரசு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பொருட்காட்சியில் பொழுதுபோக்கு அம்சம் உள்பட தனியாா் உரிமையினங்கள், தனியாா் அரங்குகள் மற்றும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கும் 39-ஆவது பொருள்காட்சியை பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தொடங்கி வைத்து, அரசுத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா். இந்நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ், மக்களவை உறுப்பினா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

வியாழக்கிழமை முதல் 45 நாள்கள் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொருள்காட்சி நடைபெறும். இப்பொருள்காட்சியில் அரசுத் திட்டங்கள் மட்டுமல்லாமல், ராட்டினம், ஜெயின்ட் வீல் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, மக்கள் அனைவரும் இப்பொருள்காட்சியை கண்டுகளித்து, அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து அறிந்து கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.