மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

கோவையில் பரவலாக மழை: மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடை

News image

கோவை, சுங்கம் பகுதியில் பெய்த மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்றோா்.

Updated On :12 மே 2026, 1:54 am IST

கோவை மாநகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

கோவையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த 3 நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல, திங்கள்கிழமை மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்தூா், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.

மழை தொடங்கிய சில நிமிஷங்களிலேயே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரின் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இரவு 8 மணிக்குப் பிறகு மழை குறைந்ததைத் தொடா்ந்து, பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.