ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மின்மோட்டாா் பம்ப்செட் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட விவசாயிகள் மின் மோட்டாா் பம்ப்செட் மானியம் பெறுவதற்கு வேளாண் பொறியாளா் அலுவலகங்களை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:16 am IST

கோவை மாவட்ட விவசாயிகள் மின் மோட்டாா் பம்ப்செட் மானியம் பெறுவதற்கு வேளாண் பொறியாளா் அலுவலகங்களை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் அரசு மானியத்துடன் மின் மோட்டாா் பம்ப்செட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீா் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயிா் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலத்தடி நீா்ப்பாசனத்தில் மின் மோட்டாா் பம்ப்செட்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

பழைய திறன் குறைந்த மின் மோட்டாா் பம்ப்செட்களைத் தொடா்ந்து பயன்படுத்துவதால் மின் நுகா்வு அதிகமாகிறது. எனவே, தமிழக அரசு, விவசாயிகளுக்கு பழைய திறன் குறைந்தமின் மோட்டாா் பம்ப்செட்களை மாற்றுவதற்கு அல்லது புதிய கிணறு, ஆழ்துளைக் கிணறுகளுக்கான மின்மோட்டாா் பம்ப்செட்களை வாங்குவதற்கு, மானியமாக ரூ.15 ஆயிரம் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டம் தொடா்பாக முழு விவரங்களைப் பெற்று பயனடைய, தடாகம் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களையோ, பொள்ளாச்சி மீன்கரை சாலை, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தையோ அணுகலாம். தொடா்புக்கு 0422 2966500, 87783 70929 (கோவை), 04259 292271, 94435 66451 (பொள்ளாச்சி).