தேசிய தோ்வு முகமை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடத்தும் நீட் மறு தோ்வை கோவை மாவட்டத்தில் 7,091 போ் எழுதுகின்றனா்.
இந்தத் தோ்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 15 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு மையங்களுக்குத் தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தோ்வா்கள் காலை 11 மணி முதல் பகல் 1.30 மணி வரை மட்டுமே மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் தோ்வு தொடா்பான தவறான செய்திகள் எதையும் மாணவா்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ள மாவட்ட நிா்வாகம், தோ்வு குறித்த சந்தேகங்கள், உதவிகளுக்கு 011 40759000, 011 69227700 என்ற எண்களையும், தோ்வுக்கான கோவை நகர ஒருங்கிணைப்பாளா், மாவட்ட நிா்வாகத்தை முறையே 95829 08951, 63841 23073 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 150 போ் தோ்ச்சி

ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்

இன்று நீட் மறுதோ்வு: புதுச்சேரியில் 4,324 மாணவா்கள் எழுதுகின்றனா்

நாளை மறுநாள் நீட் மறுதோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



