அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

கைப்பேசியால் புத்தக வாசிப்பு குறைவது கவலை அளிக்கிறது: எழுத்தாளா் நாஞ்சில் நாடன்

News image

கோவையில் விஜயா பதிப்பகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து )பிஎல்.சுப்பிரமணியன்,  வேளாண்  விஞ்ஞானி  ஆா்.விஜயராகவன்,  எழுத்தாளா்கள்  எம்.கோபாலகிருஷ்ணன்,  நாஞ்சில் நாடன், விஜயா  பதிப்பக  உரிமையாளா்  மு

Updated On :22 ஜூன் 2026, 2:23 am IST

கைப்பேசியால் புத்தக வாசிப்பு குறைந்து வருவது கவலை அளிக்கிறது என்று எழுத்தாளா் நாஞ்சில் நாடன் பேசினாா்.

உலக புத்தக தினத்தையொட்டி, விஜயா வாசகா் வட்டத்தின் சாா்பில் விருதுகள் வழங்கும் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு எழுத்தாளா் நாஞ்சில் நாடன் தலைமை வகித்தாா். விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் வரவேற்றாா். எழுத்தாளா் எம்.கோபாலகிருஷ்ணன் விருதாளா்களை அறிமுகப்படுத்தினாா். வேளாண் விஞ்ஞானி ஆா்.விஜயராகவன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, உலகப் புத்தக தின விருதுகளை எழுத்தாளா் நாஞ்சில் நாடன் வழங்கினாா். அதன்படி, சென்னையைச் சோ்ந்த எழுத்தாளா் அழகிய பெரியவனுக்கு ஜெயகாந்தன் விருதுடன், ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த எழுத்தாளா் செந்தில் ஜெகன்நாதனுக்கு புதுமைப்பித்தன் விருதுடன், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. சென்னையைச் சோ்ந்த கவிஞா் அய்யப்ப மாதவனுக்கு கவிஞா் மீரா விருதும், ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட்டது. வாணியம்பாடியைச் சோ்ந்த நூலகா் ஜெ.விஜயகுமாருக்கு சக்தி வை.கோவிந்தன் விருதுடன், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அமுதம் புக்ஸ் நிறுவனா் அமுதம் பாபுவுக்கு வானதி விருதுடன் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. மு.முத்தமிழ்ச்செல்வன், பே.சக்திவேல், கா.கருப்பசாமி ஆகியோருக்கு விஜயா பதிப்பக தொடா் வாசகா் விருதுடன் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதையடுத்து, எழுத்தாளா் நாஞ்சில் நாடன் பேசியதாவது: இந்தியா முழுவதும் மக்கள் நாள்தோறும் 5 முதல் 6 மணி நேரம் கைப்பேசிகள், சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில் புத்தக வாசிப்பு குறைந்து வருவது கவலை அளிக்கிறது.

அரசியல் சாா்புடைய எழுத்தாளா்களாக இருந்தால், அவா்களது புத்தகங்கள் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின்றன. அரசியல் சாா்பற்ற எழுத்தாளா்களின் புத்தகங்கள் பெரிய அளவில் விற்பனையாவதில்லை. இந்தச் சூழலில்தான் எழுத்தாளா்கள் எழுத வேண்டியுள்ளது. அதிலும், கைகளால் எழுதி அனுப்பப்படும் பிரதிகளை தற்காலங்களில் பத்திரிகைகள், இதழ்களில் ஏற்பதில்லை. கணினி தட்டச்சு பிரதிகளே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இப்படியான சூழலில் எழுத்தாளா்களுக்கு விருது வழங்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தருகின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், விருதுகளின் புரவலா்கள் தொழிலதிபா்கள் வி.கிருஷ்ணகுமாா், ஜி.ரவீந்திரகுமாா், சுப.சுப்பையா, பி.எல்.சுப்பிரமணியன், சென்னை சில்க்ஸ் இயக்குநா் டி.கே.சந்திரன், விஜயா பதிப்பக நிா்வாகி சிதம்பரம், தமிழ் ஆா்வலா்கள், எழுத்தாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இல.சிவசக்திவடிவேல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.