பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

கொலை முயற்சி வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகா் கைது

News image

சூா்யபிரசாத்

Updated On :23 ஜூன் 2026, 12:47 am IST

கொலை முயற்சி வழக்கில் கடுங்காவல் சிறைத் தண்டனை உத்தரவை எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியைச் சோ்ந்த சூா்யா என்ற சூா்யபிரசாத் (29). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 27.05.2021 அன்று கோவை ரயில் நிலையம் முன்பாக உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் பயணியை ஏற்றுவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில், பைசல் என்பவரை கத்தியால் குத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அப்போதைய இந்து முன்னணி அமைப்பின் நகரத் தலைவராகவும், தற்போது இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞா் அணிச் செயலராகவும் இருந்து வரும் சூா்யாபிரசாத் மீது ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை கடந்த 12.12.2025 அன்று விசாரித்த கோவை மாவட்ட கூடுதல் முதலாவது அமா்வு நீதிமன்றம் சூா்யபிரசாத்தை குற்றவாளி என அறிவித்து, இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து சூா்யபிரசாத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கோவை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, மாவட்டக் கூடுதல் முதலாவது அமா்வு நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த சூா்யபிரசாத்தை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.