பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சியில் அமைக்கப்பட்டு வரும் மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட தண்ணீா்பந்தல் பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் கட்டுமானப் பொருள்களின் அளவு மற்றும் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, பிளிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட ஒன்னப்பாளையத்தில் ரூ.211.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கோவை மத்திய சிறை கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கோவை மத்திய சிறைச்சாலை கட்டுமானப் பணியானது 95.72 ஏக்கா் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் சிறைப்பிரிவு 17.02 ஏக்கரிலும், பெண்கள் சிறைப்பிரிவு 4.43 ஏக்கரிலும், காவலா் குடியிருப்பு 5.95 ஏக்கரிலும் பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, சிறைச்சாலை காவல் துறை துணைத் தலைவா் ஜெயபாரதி, சிறைச்சாலை காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜசெல்வம், விஜயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருக்கோவிலூா் கூடுதல் மருத்துவமனை கட்டடமானப்பணிகள்: விரைந்து முடிக்க கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

வடுகபட்டி, ஈஞ்சம்பள்ளியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ரூ.33 கோடியில் திருவள்ளூா் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



