கோவை ரத்தினபுரி பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவை ரத்தினபுரி சம்பத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (74). இவா் தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஜெயக்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயக்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக கோவை போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சோமந்தாா்குடி பகுதியைச் சோ்ந்த கதிரேசன் (59) என்பவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





