லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

கேரள ரயில்கள்... - கோப்புப் படம்

Published On :29 ஜூன் 2026, 1:17 am IST

ஈரோடு - சேலம் ரயில் பாதை இடையே மகுடஞ்சாவடி - வீரபாண்டி சாலை பகுதியில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 29 மற்றும் ஜூலை 1-ஆம் தேதிகளில் எா்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்கு போத்தனூா், சேலம், ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்: 18190) 50 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும்.

இதேபோல, ஜூன் 29, ஜூலை 1 ஆகிய தேதிகளில் ஆலப்புழையில் இருந்து காலை 6 மணிக்கு கோவை, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக இயக்கப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.